News August 17, 2025
NDA அணியில் PMK, DMDK இணைய வேண்டும்: கஸ்தூரி

திமுகவை வீழ்த்த, NDA கூட்டணியில் PMK மற்றும் DMDK இணைய வேண்டும் என நடிகை கஸ்தூரி விருப்பம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்த அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைக்கவில்லை எனவும், தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News August 17, 2025
இயக்குநர் ஷங்கரின் சொத்து மதிப்பு இவ்வளவா!

இன்று 62-வது பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக அவர் ₹50 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். சென்னையில் அவருக்கு ஒரு பிரமாண்ட வீடு உள்ளது. அதன் மதிப்பு ₹6 முதல் ₹8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதுபோக, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள அவருக்கு, மொத்தமாக ₹150 கோடி முதல் ₹200 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
RSS விவகாரம்: காங்., VS பாஜக வார்த்தை போர்

சுதந்திர தின உரையில் PM மோடி RSS-ஐ புகழ்ந்து பேசியது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த வகையில், நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் இந்திய தாலிபன் தான் RSS எனவும், அதுதான் இந்தியாவில் பதிவு செய்யப்படாத ஒரே அமைப்பு என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் விமர்சித்துள்ளார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, மகாத்மா காந்தி RSS-ஐ ஏன் புகழ்ந்தார் என கேள்வி எழுப்பியுள்ளது.
News August 17, 2025
55 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் குழாய் பெற்ற தமிழக கிராமம்

குடிநீருக்காகச் சென்ற பட்டியலின மக்களை, மாற்று சமூகத்தினர் சாதிப்பெயரால் திட்டியுள்ளனர். தென்காசி தலைவன்கோட்டையில் இப்படி நடந்தது ஓரிரு நாள் அல்ல, 55 ஆண்டுகள். இதனிடையே, ஒரு பிரச்னைக்காக மதுரை கோர்ட் வந்த இக்கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் (70), நீதிபதியிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். மறுநாளே அப்பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை ஊர்களோ?