News August 12, 2024
ஒலிம்பிக்ஸ் வீரர்களை சந்திக்கும் PM

சுதந்திர தினத்தன்று பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற வீரர்களை பிரதமர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியை முடித்து விட்டு பிற்பகல் 1 மணிக்கு வீரர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சென்ற 117 வீரர்களும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் தொலைபேசியில் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 5, 2026
தவெகவுடன் கூட கூட்டணி வைப்போம்: மன்சூர் அலிகான்

விஜய்யுடன் கூட கூட்டணி அமைப்போம் என்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். விஜய்க்கு வரும் கூட்டத்தை தான் பார்க்கிறேன் என்ற அவர், தவெகவுக்கு தான் ஆதரவளிப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைவில் விஜய்யை சந்தித்து கூட்டணி நிலைப்பாட்டை மன்சூர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. மன்சூர், 2024 தேர்தலில் வேலூரில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
News March 5, 2026
இதை கூட EPS-யால் சொல்ல முடியவில்லை: கோவி.செழியன்

தேர்தல் கூட்டணி பற்றி பேச EPS டெல்லிக்கு சென்றார்; அதனால்தான் 2026-ல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் போட்டி என ஸ்டாலின் கூறியதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி என வெளிப்படையாக கூற முடியாத கோழையாக EPS உள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், வலுவான கூட்டணி அமைத்துள்ள திமுக, 2026-ல் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்றார்.
News March 5, 2026
திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

திருப்பதி கோயில் தரிசன டோக்கனை WhatsApp மூலம் ஈசியாக பெறலாம் தெரியுமா? Whatsapp-ல் ஆந்திர அரசு சேவை எண் ‘9552300009’ நம்பருக்கு ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள். சேவைகள் அடங்கிய மெசேஜ் வரும். அதில், TTD temple service-ஐ தேர்வு செய்து, தேதி & நேரத்தை தேர்வு செய்து டிக்கெட்டை புக் செய்யலாம். கட்டணத்தை செலுத்திய பிறகு, டிக்கெட் மெசேஜ் வந்துவிடும். இந்த பதிவை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


