News September 9, 2025
ராதாகிருஷ்ணனுக்கு PM, ஜனாதிபதி வாழ்த்து

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு PM மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொதுவாழ்வில் உங்களுக்கு இருக்கும் அனுபவம், நாட்டை முன்னோக்கி அழைத்து செல்வதில் பெரும் பங்கு வகிக்கும் என முர்மு வாழ்த்தியுள்ளார். அதேபோல், சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும், நாட்டின் சிறந்த துணை ஜனாதிபதியாக CPR இருப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
பஞ்சாப்பிற்கு ₹1,600 நிதியுதவி : PM மோடி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பிற்கு ₹1,600 கோடி நிதியுதவி வழங்கப்படும் என PM மோடி அறிவித்துள்ளார். ஹெலிகாப்டரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட PM, பிறகு குருதாஸ்பூரில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ₹60,000 கோடி நிவாரணம் கேட்ட நிலையில் மிகக் குறைவான தொகை வழங்கப்படுவதாக பஞ்சாப் வருவாய் துறை அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக PM ஹிமாச்சலுக்கு ₹1,500 கோடி நிதியுதவி அறிவித்திருந்தார்.
News September 10, 2025
அன்னை தெரசா பொன்மொழிகள்

*தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மிகவும் மோசமான வறுமையாகும். *ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை. *சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், ஏனென்றால் அதில்தான் உங்களது வலிமை உள்ளது. *உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள். *மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.
News September 10, 2025
நேபாளில் ராணுவ ஆட்சி

நேபாள் நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை கண்டித்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நேபாள் ஜனாதிபதி, PM ராஜினாமா செய்தனர். நாடாளுமன்றம், அமைச்சர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நேபாள் ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது.