News June 8, 2024
நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி?

நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவியை வழங்க INDIA கூட்டணி முன்வந்ததாகவும், ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிர்வாகி கே.சி.தியாகி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடருவோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், INDIA கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 24, 2025
FLASH: செங்கோட்டையன் – டிடிவி தினகரன் சந்திப்பு

சென்னையில், செங்கோட்டையனை நேரில் சந்தித்து TTV தினகரன் தனது ஆதரவை தெரிவித்தார். அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, டெல்லியில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் பேசியது குறித்து செங்கோட்டையன் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. NDA கூட்டணியில் EPS-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என டிடிவி தினகரன் கூறி வருவது கவனிக்கத்தக்கது.
News September 24, 2025
தமிழ் சினிமா இயக்குநர் காலமானார்.. நேரில் அஞ்சலி

உடல்நலக்குறைவால் உயிரிழந்த <<17811560>>இயக்குநர் நாராயண மூர்த்தியின்<<>> உடல் பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள அவரது மகன் யோகேஷ்வரன் சென்னை திரும்பியதும், நாளை மறுநாள் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நாராயண மூர்த்தி உடலுக்கு ‘மனதை திருடிவிட்டாய்’ படக்குழு, ‘நந்தினி’, ‘அன்பே வா’ சீரியல் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். #RIP
News September 24, 2025
தமிழக அரசில் 881 வேலைவாய்ப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 881 கெளரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 38 பாடப் பிரிவுகளில் விரிவுரையாளர்கள் நிரப்பப்பட உள்ளனர். தேர்வு முறை: கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.8. இதுகுறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <