News July 4, 2024
பிரதமர் மோடி ரஷ்யா பயணம்

3ஆவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்றார். ஜி7 அமைப்பில் இந்தியா இல்லாதபோதும், அதன் 50ஆவது உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜூலை 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஆஸ்திரியா செல்வது இதுவே முதல்முறை.
Similar News
News September 22, 2025
சென்னை மீது குண்டுமழை பொழியப்பட்ட நாள்!

முதல் உலகப்போரில், சென்னை மீது குண்டுமழை பொழியப்பட்ட நாள் இன்று. செப்டம்பர் 22, 1914-ல் ஜெர்மனியின் ‘எம்டன்’ கப்பல், சென்னை துறைமுகத்தின் மீது 130 குண்டுகளை வீசியது. இதில், எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறின. ஐகோர்ட் சுற்றுச்சுவரும் சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், தாக்குதல் நடத்தியது செண்பகராமன் என்ற இந்திய பொறியாளர்தான்.
News September 22, 2025
அக்.1 முதல் பரப்புரையை தொடங்கும் நயினார்..!

இபிஎஸ், விஜய் வரிசையில் தேர்தல் சுற்றுப் பயணத்தை நயினார் நாகேந்திரன் அக்.1 முதல் தொடங்கவுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சுற்றுப்பயணத்தை அவர் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3 தொகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொள்வார் என்றும் 3-வது தொகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நயினார் பரப்புரை NDA-க்கு கைகொடுக்குமா?
News September 22, 2025
கருணாநிதி சிலையை நிறுவ அனுமதி மறுப்பு

நெல்லையில் வள்ளியூர் சந்தை அருகே Ex CM கருணாநிதியின் சிலையை நிறுவ அனுமதி கோரிய TN அரசின் மனுவை SC தள்ளுபடி செய்தது. முன்னதாக, மக்களுக்கு இடையூறு ஏற்படும் என கூறி சிலை வைப்பதற்கு சென்னை HC மறுப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழக அரசு SC-ல் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படும் என கருதி சென்னை HC அளித்த உத்தரவில், தலையிட விரும்பவில்லை என SC தெரிவித்துள்ளது.