News September 17, 2025

PM மோடியின் பரிசு பொருள்கள் ஏலம்.. வாங்குவது எப்படி?

image

PM மோடிக்கு வழங்கப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட பரிசு பொருள்கள் இன்று முதல் அக்.2-ம் தேதி ஏலம் விடப்படவுள்ளன. ஓவியங்கள், கலைப்பொருள்கள், சிற்பங்கள், விளையாட்டு சார்ந்த பொருள்களை நீங்கள் வாங்க விரும்புவோர் <>www.pmmementos.gov.in<<>> தொடர்பு கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக 2019-ல் PM மோடியின் பரிசு பொருள்கள் ஏலம் விடப்பட்டு ₹50 கோடி நிதி திரட்டப்பட்டு கங்கை தூய்மை பணிக்காக பயன்படுத்தப்பட்டது.

Similar News

News September 17, 2025

உலக கிரிக்கெட்டின் உச்சம் தொட்ட தமிழர்!

image

ICC வெளியிட்டுள்ள ஆண்கள் T20 பவுலிங் தரவரிசை பட்டியலில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி(733 புள்ளிகள்) முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். T20 கிரிக்கெட்டில் பும்ரா & ரவி பிஷ்னோய்க்கு பிறகு, முதல் இடத்துக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையையும் வருண் சக்கரவர்த்தி பெற்றுள்ளார். ஆசிய கோப்பையில் UAE & பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அவர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 17, 2025

பெரியாருக்கு விஜய் மரியாதை

image

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், அவரது சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சமூக சீர்திருத்த கொள்கை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்தவர் பெரியார் என X தளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார். முன்னதாக நாகை, திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களிடம், பரப்புரை பயணம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

News September 17, 2025

திருமணத்துக்கு தங்கம்: விண்ணப்பிப்பது எப்படி?

image

ஏழை விதவை தாய்மார்களின் மகள்களின் திருமணத்துக்கு ₹50 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. ஏழை விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தில் பயன்பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹72,000-க்கு மேல் இருக்கக்கூடாது. திருமணத்துக்கு 40 நாள்களுக்கு முன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பியுங்கள். விண்ணப்ப நிலையை https://edistricts.tn.gov.in/socialwelfare-ல் அறிந்துகொள்ளலாம்.

error: Content is protected !!