News September 2, 2025
PM மோடியின் தீபாவளி பரிசு.. நாளை GST கவுன்சில் கூட்டம்

56-வது GST கவுன்சில் கூட்டம் நாளை தொடங்க உள்ளது. மக்களுக்கு தீபாவளி பரிசு அறிவிக்கப்படும் என PM மோடி சுதந்திர தின உரையில் கூறிய நிலையில், நாளைய கூட்டம் நடைபெற உள்ளது. GST மறுசீரமைப்பு குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. GST வரம்பில் 12%, 28% நீக்கப்பட உள்ளது. அத்தியாவசிய பொருள்களுக்கான வரி குறைக்கப்படும் எனவும், ஆடம்பர பொருள்கள் மீதான வரி உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 3, 2025
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

*எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காக துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.
*கோழைகளே பாவ காரியங்களை புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருபோதும் பாவம் செய்யார்.
*சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.
*எந்த வேலையாக இருந்தாலும் அதை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.
*உறுதியுடன் இரு, அதற்கு மேலாக தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.
News September 3, 2025
பொறுப்பு டிஜிபி நியமனம்: HC-ல் வழக்கு

தமிழக பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் வரதராஜ் தரப்பில் HC-ல் முறையிடப்பட்டது. தற்காலிக அடிப்படையில் டிஜிபியை நியமிக்கக்கூடாது என்ற SC-ன் தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் ர்ச்த்க்ப்ஃப்ட்
News September 3, 2025
விஜய் நினைத்திருந்தால்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

‘குட்டி தளபதி’யாக நான் நினைத்திருந்தால், என்னிடம் விஜய்யும் துப்பாக்கியை கொடுத்திருக்க மாட்டார், நானும் அதை வாங்கியிருக்க மாட்டேன் என்று SK கூறியுள்ளார். ‘மதராஸி’ பட நிகழ்வில் பேசிய அவர், அண்ணன் அண்ணன் (விஜய்) தான், தம்பி தம்பி தான் என்றார். ‘கோட்’ படத்தின் ஒரு காட்சியில் வரும் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது போன்ற காட்சியால், இதுபோன்ற பேச்சுகள் இணையத்தில் உலாவியது.