News March 11, 2025

இன்று மொரீஷியஸ் செல்கிறார் PM மோடி

image

2 நாள் பயணமாக PM மோடி இன்று மொரீஷியஸ் செல்கிறார். அந்நாட்டின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில், எனது நண்பரும், பிரதமருமான டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது பயணம் இருநாட்டு உறவுகளில் பிரகாசமான அத்தியாயத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 11, 2025

கூகுளை மிரட்டும் சீனாவின் அதிவேக கம்ப்யூட்டர்!

image

உலகிலேயே மிக வேகமானதாக கருதப்பட்ட கூகுளின் அதிவேக குவாண்டம் கம்ப்யூட்டரை விட, அதிவேகமான ‘ஜுச்சோங்ஷி – 3’ கம்ப்யூட்டரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இது சூப்பர் கம்ப்யூட்டர்களின் தொழில்நுட்பத்துறையில் புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. 105 க்யூபிட் மற்றும் 182 கப்ளர் ப்ராஸசர்களை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. கூகுளின் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு வேகத்தில் இது இயங்குமாம்.

News March 11, 2025

ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த ஏர்போர்ட் இதுதான்…!

image

சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விமான நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் 40 மில்லியன் பயணிகளை கையாளும் பிரிவில் சிறந்த விமான நிலையமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்வாகியுள்ளது. இதே பிரிவில், 2018 முதல் 2023ம் ஆண்டு வரை 6 முறை இந்த விமான நிலையத்திற்கு விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 11, 2025

‘ஜனநாயகன்’ படத்தில் காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்

image

‘ஜனநாயகன்’ படத்தில் வரும் பாடல் ஒன்றில், இயக்குநர்கள் அட்லி, நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு பிடித்தமான, நெருக்கமான இயக்குநர்களான இவர்கள், அவரின் கடைசி படத்தில் நடித்து செண்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளாக இவை இருக்க வாய்ப்புள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!