News April 30, 2024
பிரதமர் மோடி பொய்களை மட்டுமே பேசுகிறார்

பெண்களின் தாலியை காங்கிரஸ் பறித்துக் கொள்ளும் என்று பிரதமர் மோடி பொய் பேசுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பல்கலைக்கழகம், ESI மருத்துவமனை, ஜவுளி பூங்கா, ரயில்வே பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை என்றும், இதில் ஒன்றையாவது மோடி அரசு செய்திருக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News November 15, 2025
மணிரத்னம் ஹீரோயினாக ஆசை: கயாடு லோஹர்

‘டிராகன்’ படம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட கயாடு லோஹர், நல்ல கதையம்சம் இருந்தால் எந்த ஹீரோவுடனும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். அதேநேரம், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், கவுரி கிஷன் மீதான உருவகேலிக்கு பதிலளித்த அவர், எல்லா துறைகளிலும் விமர்சனங்கள் வரும், அதிலிருந்து தப்பவே முடியாது என்றும் கூறியுள்ளார். இவர் ‘STR 49’ படத்தில் நடித்து வருகிறார்.
News November 15, 2025
விஜய் கட்சியில் முன்னாள் MLA-க்கள் இணைந்தனர்

திராவிட கட்சிகளான திமுக, அதிமுக போலவே, விஜய்யும் தமிழகம், புதுச்சேரியில் தனது கட்சியை வலுப்படுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில், புதுச்சேரி பாஜக முன்னாள் MLA சாமிநாதனும், காரைக்கால் அதிமுக முன்னாள் MLA அசனாவும் தவெகவில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருங்கிய நண்பர்கள். அவர்களுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
News November 15, 2025
பிஹார் தேர்தல் அனைவருக்கும் பாடம்: ஸ்டாலின்

JD(U) தலைவர் நிதிஷ்குமாருக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேஜஸ்வி யாதவ்வின் பிரசாரத்தையும் அவர் பாராட்டியுள்ளார். பிஹார் தேர்தல் அனைவருக்குமான பாடம் என்ற ஸ்டாலின், ECI-யின் தவறான, பொறுப்பற்ற செயல்களை பிஹார் முடிவுகள் மூடிமறைத்துவிடாது என்றும் விமர்சித்துள்ளார். மேலும், INDIA கூட்டணி தலைவர்கள் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


