News August 27, 2025
டிரம்ப் அழைப்பை நிராகரித்த PM மோடி

சமீபத்திய நாள்களில் PM மோடியை தொடர்பு கொள்ள டிரம்ப் 4 முறை தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால், மோடி அத்தனை அழைப்புகளையும் நிராகரித்ததாக ஜெர்மன் மீடியா ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்த நியாயமும் இல்லாமல், இந்திய பொருள்களுக்கு 50% வரி விதித்ததால் அந்த கோபத்தில் அவர் அப்படி செய்துள்ளார் என்றும், இதுவே இந்தியா சீனாவை நோக்கி திரும்ப முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
Similar News
News August 27, 2025
மேற்கு வங்க மக்கள் திருடர்களா? மம்தா பதிலடி

மாநில முதல்வருக்கு மரியாதை கொடுக்காமல், மேற்கு வங்க மக்கள் அனைவரும் திருடர்கள் என்பது போல் PM மோடி பேசியுள்ளதாக CM மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நிதியை TMC விழுங்கிவிடுவதாக மோடி விமர்சித்த நிலையில், PM இவ்வாறு பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என மம்தா கூறியுள்ளார். மத்திய அரசு உரிய நிதியை மாநிலத்துக்கு வழங்காமல் திருட்டுக் குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் சாடியுள்ளார்.
News August 27, 2025
புஜாராவின் ஆட்டத்தை சிலாகித்த விராட் கோலி

இந்திய டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த புஜாரா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், புஜாராவிற்கு தனது நன்றியை விராட் கோலி தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். அதில் நான்காவது இடத்துக்கான எனது வேலையை எளிதாக்கியதற்கு நன்றி என்றும் உங்களது கிரிக்கெட் பயணம் அருமையாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். உங்களது அடுத்தகட்ட நகர்வுகளுக்கு வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.
News August 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 440 ▶குறள்:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
▶ பொருள்: தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமல் போய்விடும்.