News September 26, 2025

பெண்களுக்கு ₹10,000 நிதி.. PM மோடி துவக்கி வைத்தார்

image

பீஹாரில் சுய தொழில் செய்வதற்காக 75 லட்சம் பெண்களுக்கு ₹10,000 வழங்கும் திட்டத்தை PM மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ₹7,500 கோடி, பெண்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு முதல் தவணையாக ₹10,000, 2-வது தவணையாக ₹2 லட்சம் வழங்கப்படவுள்ளது. பிஹாரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் தமிழகத்திற்கும் வருமா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News

News January 3, 2026

காரைக்குடி: ஒன்றரை வயது குழந்தை சடலமாக மீட்பு

image

காரைக்குடி அருகே உள்ள கொத்தாரி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுதாவின் ஒன்றரை வயது மகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சுதா கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, சிறுமி காணாமல் போயிருந்ததையடுத்து, தேடிப் பார்க்கையில் அருகில் உள்ள குளத்தில் சிறுமி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாார். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 3, 2026

பொங்கல் பரிசு பணம்.. முக்கிய தகவல் கசிந்தது

image

பொங்கல் பரிசுத்தொகைக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. பொதுவாக பொங்கல் பரிசு பணம் ரேஷன் கடைகளில் தான் வழங்கப்படும். ஆனால் இம்முறை வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பணத்தை கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் இந்நடைமுறையை மேற்கொள்ளலாமா என பரிசீலித்து வருவதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.

News January 3, 2026

முக்கியமான Calls-ஐ மிஸ் பண்ணாம இருக்க DO THIS

image

வீட்டில் உள்ளவர்கள் அவசர தேவைக்கு உங்களுக்கு Call பண்ணும்போது, அதனை எடுக்கமுடியாமல் போனால் ஏதாவது அசம்பாவிதம் நேரலாம். இதனை தவிர்க்க போனில் இந்த Settings-ஐ ON- செய்யுங்க. ➤போனில் உள்ள Dial pad-க்கு சென்று ➤Calling Accounts ➤Call forward Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤நெருங்கிய உறவினரின் போன் நம்பரை உள்ளிடுங்கள். Call-ஐ நீங்கள் எடுக்கவில்லை என்றால், அது அவர்களுக்கு Forward ஆகும். SHARE.

error: Content is protected !!