News September 23, 2025
ஓய்வின்றி உழைக்கும் PM மோடி: அமித் ஷா

கடந்த 24 ஆண்டுகளில் மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இடைவிடாத உழைப்பு பிரதமரின் முடிவுகளையும், பணியின் வேகத்தையும் பாதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மோடியின் தலைமையில், 2047க்குள் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் பாஜக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
மீண்டும் குடும்பத்தை காப்பாற்ற ஜார்ஜ் குட்டி தயார்

‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் 2 பாகங்களும் வசூலில் பட்டையை கிளப்பியதோடு, மக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றன. இதை தமிழில் கமல்‘பாபநாசம். என்று ரீமேக் செய்து ஹிட் கொடுத்தார். ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கும் நிலையில் கொச்சியில் ‘த்ரிஷ்யம் 3’ நேற்று நடந்து முடிந்துள்ளது. ஜார்ஜ் குட்டி குடும்பத்தை காப்பாற்றும் அடுத்த அத்தியாயத்தை விரைவில் திரையில் காணலாம்.
News September 23, 2025
வரலாற்றில் இன்று

1799 – இலங்கையில் அனைவருக்கும் மத சுதந்திரம் வழங்கப்பட்டது
1951 – நடிகர் பி. யு. சின்னப்பாவின் நினைவு தினம்
1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனில் மோதியது
1985 – கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு பிறந்த தினம்
1996 – நடிகை சில்க் ஸ்மிதா மறைந்த தினம்
News September 23, 2025
இ – சிகரெட்டால் ரன்பீர் கபூருக்கு சட்ட சிக்கல்

ஆர்யன் கான் இயக்கிய வெப் சிரீஸ் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதில் கேமியோவாக ரன்பீர் கபூர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில் இ-சிகரெட்டை புகைப்பது போன்ற காட்சியில் ரன்பீர் நடித்தது இப்போது பிரச்னையாகியுள்ளது. தடை செய்யப்பட்ட இ-சிகரெட் சினிமாவில் பயன்படுத்தியதால், ரன்பீர் கபூர் மீதும், ஒளிபரப்பிய நெட்பிளிக்ஸ் மீதும் மனித உரிமையை ஆணையம் FIR பதிய கோரி போலீஸை வலியுறுத்தியுள்ளது.