News August 19, 2024
உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி அரசு முறை பயணமாக உக்ரைன் செல்வதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் வேளையில், பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Similar News
News March 19, 2026
சற்றுமுன்: விலை ₹10,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹265-க்கும், கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11-ம் தேதி கிலோ வெள்ளி ₹3,00,000-க்கு விற்பனையான நிலையில், 8 நாள்களில் ₹35,000 குறைந்துள்ளது.
News March 19, 2026
ராகுலை பார்த்தால் பெண்களுக்கு சங்கடம்: கங்கனா

பார்லிமென்ட் நுழைவுவாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து ராகுல் காந்தி டீ, பிஸ்கட் சாப்பிட்டது சர்ச்சையானது. இந்நிலையில், ராகுல் காந்தியை பார்க்கும்போது பெண்களுக்கு சங்கடமாக உள்ளது என்று பாஜக MP கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். யாரைப் பார்த்தாலும் அவர் மரியாதையில்லாமல் ஒருமையில் பேசுவதாக கூறிய கங்கனா, சகோதரி பிரியங்கா காந்தியின் கண்ணியத்தை பார்த்து ராகுல் கற்றுக் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 19, 2026
அன்பிலை எதிர்க்கும் நவல்பட்டு விஜி.. அன்று நட்பு, இன்று பகை!

ஒரு காலத்தில் நட்புடன் இருந்த அன்பில் மகேஷுக்கும், <<19423109>>நவல்பட்டு விஜிக்கும்<<>> இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் இருந்துள்ளது. இதனால், அவர் திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இந்நிலையில், சமூக வாக்கு, மக்களுக்கு தெரிந்த முகம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், அன்பில் மகேஷுக்கு எதிராக திருவெறும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளராக நவல்பட்டு விஜியை களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம்.


