News February 10, 2025
மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் PM மோடி

தேர்வு எழுத உள்ள மாணவர்களை PM மோடி நேரடியாக சந்தித்து கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்வு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வின் 8வது ஆண்டு நிகழ்ச்சி இந்தாண்டு 8 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வை எதிர்கொள்வது எப்படி, தேர்வு பயத்தை போக்குவது, கனவுகளை நினைவாக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட வகையில், 2,500 மாணவர்களுடன் மோடி கலந்துரையாட உள்ளார்.
Similar News
News March 14, 2026
தள்ளுபடி.. CM ஸ்டாலின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு தமிழக அரசு சர்ப்ரைஸ் மானியம் அறிவித்துள்ளது. சிலிண்டர் பிரச்னை உள்ளவரை ஹோட்டல்கள், டீ கடைகளுக்கு மின்சாரம் யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படும் என்றும், வீடுகளில் சமைத்து உணவு விற்போருக்கும் இந்த மின் கட்டண சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2026
பெட்ரோல் பங்க்குகளில் மண்ணெண்ணெய்

வளைகுடா போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மண்ணெண்ணெய் விற்பனைக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையகங்களில் தலா 2,500 லிட்டர் மண்ணெண்ணெயை ஒரு மாத காலத்துக்கு சேமித்து வைக்கவும் அனுமதி அளித்துள்ளது.
News March 14, 2026
BREAKING: வைரமுத்துவுக்கு ஞான பீட விருது

கவிஞர் வைரமுத்துவுக்கு இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞான பீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு எனப் போற்றப்படும் ஞான பீட விருது, தமிழ் மொழியில் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோருக்கு மட்டுமே கிடைத்திருந்தது. தற்போது, 12 கவிதை தொகுப்புகள், 10 நாவல்கள், 2 ஆராய்ச்சி கட்டுரைகளை வைரமுத்து நிறைவு செய்துள்ள நிலையில், வாழ்நாள் இலக்கிய பங்களிப்பிற்காக அவர் கவுரவிக்கப்பட்டுள்ளார்.


