News September 6, 2025

பேரிடர் பாதித்த இடங்களை ஆய்வு செய்யும் PM மோடி

image

வட இந்தியாவில் ஏற்பட்ட மேகவெடிப்பு & வரலாறு காணாத கனமழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விரைவில் நேரில் பார்வையிட உள்ளதாக PM அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பேரிடர் நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News September 6, 2025

மீண்டும் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்?

image

‘இட்லி கடை’ பட ரிலீஸில் மும்முரமாக உள்ளார் தனுஷ். இதனையடுத்து, விக்னேஷ் ராஜா, ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ‘விராட பருவம்’ என்ற தெலுங்கு படத்தின் இயக்குநர் வேணு உடுகுலாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான Pre Production பணிகளும் நடக்கிறதாம். ஏற்கெனவே தெலுங்கு இயக்குநர்களுடன் வாத்தி, குபேரா படங்களில் தனுஷ் நடித்திருந்தார்.

News September 6, 2025

இறுதி கட்டத்தில் ரஷ்யா – உக்ரைன் போர்?

image

பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், மாஸ்கோவில் ஜெலன்ஸ்கியை சந்திக்க தயார் என்று புடின் கூறியிருந்தார். அத்துடன், அவருக்கு 100% பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், இது போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தவிர்ப்பதற்கான வழியே என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். வரவே முடியாத இடத்திற்கு வரச் சொல்வதால் என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முடிவுக்கு வருமா போர்?

News September 6, 2025

செப்டம்பர் 6: வரலாற்றில் இன்று

image

*1860 – அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஜான் ஆடம்ஸ் பிறந்தநாள்.
*1939 – இரண்டாம் உலகப் போர்: தென்னாப்பிரிக்கா நாட்சி ஜெர்மனியுடன் போர் தொடுத்தது
*1965 – இந்தியா பாகிஸ்தானை தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.
*1997 – டயானாவின் உடல் லண்டனில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை 250 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர்.

error: Content is protected !!