News December 19, 2024
BJP எம்பிக்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்த PM மோடி

பார்லிமென்ட் வளாகத்தில் இருதரப்பு எம்பிக்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காயமடைந்து ஹாஸ்பிட்டலில் உள்ள BJP எம்பிக்கள் உடல்நிலை குறித்து PM மோடி கேட்டறிந்தார். முன்னதாக ஹாஸ்பிட்டலுக்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, சிவராஜ் சிங் செளகான் உள்ளிட்டோர், எம்.பிக்கள் <<14921490>>முகேஷ் ராஜ்புத்<<>>, பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோ உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
Similar News
News July 4, 2025
க்ரைம் மிரட்டல் நாயகன் மைக்கேல் மேட்சன் காலமானார்

‘Kill Bill’, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் த்ரில்லர் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்(67) காலமானார். நேற்று மாரடைப்பு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மேலாளர் லிஸ் ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். #RIP
News July 4, 2025
PF-ல் சேரும் ஊழியர்களுக்கு குட் நியூஸ்

புதிதாக வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் அறிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒருமுறை 2 தவணைகளாக அதிகபட்சம் ₹7,500 வீதம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஊழியரை சேர்க்கும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சூப்பர் பிளானா இருக்கே…
News July 4, 2025
நாய்க்கடியை அலட்சியம் செய்யாதீங்க: அரசு எச்சரிக்கை!

நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்துவது முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் இருசிறார்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது ஆகியவை உயிருக்கே ஆபத்தாக மாறும் என தெரிவித்துள்ளது.