News September 8, 2025
கடைசி வரிசையில் PM மோடி.. பாஜக சொல்லும் மெசேஜ்!

டெல்லியில், BJP MP-க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் PM மோடி கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்ததை அக்கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். GST மறுசீரமைப்பு விளக்கம், கட்சி வளர்ச்சி குறித்த இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், பிரதமராக இருந்தும் கூட மோடி கடைசி வரிசையில் அமர்ந்து தான் ஒரு சாதாரண தொண்டன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியதாக பாஜகவினர் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News September 8, 2025
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (செப்.8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. TN-ல் அதிகபட்சமாக விருதுநகர் கோவிலன்குளம், அருப்புக்கோட்டையில் தலா 7CM மழையும், புதுக்கோட்டை, நாகுடி, மணமேல்குடி, அரிமளம், கீரனூரில் தலா 7CM மழையும் பதிவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழையா?
News September 8, 2025
₹20 கட்டினால் ₹2 லட்சம் காப்பீடு; முந்துங்க!

பிரீமியம் கட்ட பணம் இல்லை என்பதால் விபத்து காப்பீட்டை தொடங்காமல் இருக்கீங்களா? PM சுரக்ஷா பீம யோஜனா திட்டத்தில், ஆண்டுக்கு ₹20 கட்டினால் ₹2 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெறலாம். காப்பீடு எடுக்கும் நபர் விபத்தில் கை, கால்களை இழந்தாலோ அல்லது இறந்தாலோ, குடும்பத்தினருக்கு இந்தப் பணம் கிடைக்கும். அருகில் உள்ள வங்கிக்கு சென்று இதற்கு விண்ணப்பியுங்கள். SHARE.
News September 8, 2025
அதிமுக ICU-வில் அட்மிட்டாகும் நிலை ஏற்படும்: உதயநிதி

EPS-ன் பரப்புரையின் போது, ஆம்புலன்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டி, உதயநிதி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். ஆம்புலன்ஸில் செல்லும் நிலையை அதிமுகவிற்கு மக்கள் உருவாக்குவார்கள் எனக் கூறிய அவர், விரைவில் ICU-வில் தான் அதிமுக அனுமதிக்கப்படும் என்றார். உங்களை காப்பாற்றும்(EPS-ஐ) பணியையும் CM ஸ்டாலின் தான் செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?