News October 21, 2025
ஜப்பானிய மொழியில் வாழ்த்து சொன்ன PM மோடி

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்ட <<18061973>>சானே தகாய்ச்சிக்கு<<>> PM மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜப்பானுடன் சேர்ந்து செயலாற்ற தயாராக இருப்பதாகவும், இருநாடுகளுக்கு இடையேயான நட்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பாக இருக்க இந்தியா-ஜப்பானின் உறவு வலுவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
எச்சரிக்கை: மழைக் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க

மழைக் காலத்தில் இவற்றை தவிர்க்க வேண்டுமென்று மின்வாரியம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. *ஈரக் கைகளால் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்கக் கூடாது. *வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் சுவிட்சுகளை இயக்க வேண்டாம். *மின்கம்பங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் நீரில் செல்ல வேண்டாம். *மின்கம்பிகளில் கால்நடைகளை கட்டுவதோ, துணிகளை உலர்த்துவதோ கூடாது. *மின்தடை புகார்களை 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
News October 21, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

காலையில் ஆபரணத் <<18061425>>தங்கத்தின் விலை<<>> கிடுகிடுவென உயர்ந்த நிலையில், மாலையில் தடாலடியாக சரிவை சந்தித்துள்ளது. தற்போது, 1 சவரன் ₹1,440 குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ₹12,000-க்கும், 1 சவரன் ₹96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்று குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
News October 21, 2025
நிறைவேறியது பூஜா ஹெக்டேவின் ஆசை

‘ரெட்ரோ’ படத்தின் புரமோஷன் பணிகளின் போது தனக்கு நானியுடன் சேர்ந்து நடிக்க ஆசை என பூஜா ஹெக்டே கூறியிருந்தார். இந்நிலையில், சுஜீத் இயக்கத்தில் நானி நடிக்கும் ‘Bloody romeo’ படத்தில் நடிக்க, பூஜா ஹெக்டே கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பல படங்களில் நானி பிசியாக இருப்பதால், சுஜீத் இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங், அடுத்த ஆண்டில் தொடங்கலாம் என கூறப்படுகிறது.