News August 7, 2024
வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி?

கடந்த மாதம் 29ஆம் தேதி கேரளாவின் வயநாட்டில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்ற நிலையில் பிரதமர் மோடி வயநாடு செல்லாதது விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், வரும் ஆக.10 அல்லது 11 ஆம் தேதி பிரதமர் மோடி வயநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 29, 2025
கனிமொழியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கனிமொழி திருப்பூரில் நடைபெற்றுவரும் திமுக மகளிர் மாநாட்டில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 29, 2025
கில்லால் அனைத்து ஃபார்மெட் கேப்டனாக முடியாது: Ex வீரர்

சுப்மன் கில் திறமையான வீரர்தான், ஆனால் பல நேரங்களில் சோம்பேறித்தனமான ஷாட்களை அடிப்பதாக Ex ENG வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் தீவிரமும், ஆக்ரோஷமும் அனைத்து ஃபார்மெட் போட்டிகளிலும் வெளிப்பட்டதாகவும், ஆனால் அதை கில்லால் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் கில்லால் அனைத்து ஃபார்மெட்களுக்கும் கேப்டனாக செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
மகளிர் உரிமைத் தொகை ₹28,000.. CM ஸ்டாலின் அப்டேட்

திமுக ஆட்சியில் 1.30 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சியின் மகளிர் மாநாட்டில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையால் பெண்களுக்கு சுய மரியாதை, தன்னம்பிக்கை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், இதுவரை குடும்ப தலைவிகளுக்கு தலா ₹28,000 வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.


