News August 8, 2024

இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

image

ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 2ஆவது முறையாக இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய ஹாக்கி வீரர்களின் வெற்றி என்பது திறமை, விடாமுயற்சி மற்றும் குழு ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என பாராட்டியுள்ளார். மேலும், துணிச்சலோடு விளையாடிய வீரர்களை வாழ்த்தியுள்ளார்.

Similar News

News November 16, 2025

வாழ்க்கையை மாற்றும் பழக்கங்கள்

image

உங்களுக்குப் புதிய வாழ்க்கை தேவையில்லை. சில நல்ல பழக்கவழக்கங்கள் மட்டுமே தேவை. சிறிய, நிலையான செயல்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. என்ன பழக்கத்தை வழக்கமாக மாற்ற வேண்டும் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

News November 16, 2025

தமிழகத்திலும் பிஹார் ஃபார்முலா

image

பிஹாரில் NDA வெற்றிக்கு சிராக் பஸ்வானின் LJP(RV) முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல், தமிழகத்திலும் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகளை பெற அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். பிஹாரில் பட்டியலின கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளன. ஆனால், TN-ல் பட்டியலின கட்சிகள் வளருவதை திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் விரும்புவதில்லை என்றுசொல்லி பிரசாரம் மேற்கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளாராம்.

News November 16, 2025

போன் திருடுப்போனால் இங்கே மீட்கலாம்!

image

மொபைல் போன்கள் தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ மத்திய அரசின் ‘www.sanchar saathi.gov.in’ என்ற இணையதளம் வாயிலாக மீட்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை திருடுப்போன 41,229 போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சைபர் மோசடி அழைப்புகள், உங்கள் பெயரில் யாராவது சிம் கார்டு வாங்கி இருப்பதை தெரிந்து கொள்ளவும் மேற்கூறிய இணையதளத்தை அணுகலாம்.

error: Content is protected !!