News October 26, 2025
‘வந்தே மாதரம்’ பாடலை கொண்டாட PM அழைப்பு

PM மோடி இன்று 127-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். அதில், வரும் நவ.7-ம் தேதியன்று நாம் வந்தே மாதரம் பாடல் இயற்றி 150-வது ஆண்டில் நுழைய இருக்கிறோம். இதை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக மாற்ற வேண்டும், வரும் தலைமுறையினருக்காக இந்த கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். மேலும், ஆபரேஷன் சிந்தூர், நமது பண்டிகைகளை மேலும் வண்ணமயமாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News October 26, 2025
பாத்ரூமில் அக்கா, தங்கை பலி.. சாவு இப்படியா வரணும்

கர்நாடகாவில் பாத்ரூமில் இருந்த கேஸ் கீசரில், LPG கேஸ் கசிந்து, அதை சுவாசித்த குல்ஃபாம், தாஜ் என்ற 2 சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். நீங்கள் இதை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். யூனிட் வெளியே நிறுவப்பட வேண்டும், பயன்பாட்டில் இல்லாத போது ஆஃப் செய்ய வேண்டும், கேஸ் கசிகிறதா என அடிக்கடி சோதிக்கவும் கூறுகின்றனர்.
News October 26, 2025
உங்கள் மகளுக்கு இந்த பிரச்னை இருக்கா?

தற்போது இருக்கும் வாழ்வியல் முறை, உணவு பழக்கங்களால் பருவமடைந்த உடன் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை பற்றிய போதிய அறிவு பள்ளியில் படிக்கும் அவர்களுக்கு இருக்காது என்பதால், பெற்றோர்கள்தான் கவனிக்கணும். உங்கள் பிள்ளைக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, முகங்களில் முடி, அதீத வலி, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் இருக்கா என்பதை தெரிஞ்சிக்கோங்க. டாக்டரை அணுகினால் சீக்கிரமே சரி செய்யலாம். SHARE.
News October 26, 2025
இசைத்துறையிலும் கால் பதிக்கும் AI!

இதுவரை புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கி வந்த AI, தற்போது இசைத்துறையிலும் கால் பதிக்க உள்ளது. எழுத்து மற்றும் ஆடியோ குறிப்புகளில் இருந்து இசையை உருவாக்கும் புதிய AI Tool-ஐ OpenAI உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, USA-ல் உள்ள புகழ்பெற்ற ஜூலியார்ட் கலை பள்ளி மாணவர்களுடன் OpenAI ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இசைத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.


