News April 8, 2025
PM இன்டர்ன்சிப்: யார்-யார் விண்ணப்பிக்கலாம்?

PM இன்டர்ன்சிப் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இத்திட்டத்திற்கு ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு யார்-யார் விண்ணப்பிக்கலாம் என பார்க்கலாம். இந்தத் திட்டத்திற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பாக 21- 24 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. IIT, IMM-ல் படித்தோர், CA, CMA படித்தோர் விண்ணப்பிக்க முடியாது.
Similar News
News November 22, 2025
ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை!

ராஜ்கமல் நிறுவனம் அடுத்ததாக ரஜினியை வைத்து ‘தலைவர்173’ படத்தை தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், நடிகர்கள் தேர்வு குறித்து ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களுக்காக எந்த காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. யாரேனும் தங்கள் பெயரில் மோசடிகளில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
News November 22, 2025
தமிழகத்தை கண்காணிக்க 15 குழுக்கள்!

தமிழக பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. இந்நிலையில், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் IT தற்போதில் இருந்தே கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி IT ஆணையரகம் சார்பில் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 24 மணி நேரமும் பணப்புழக்கத்தை கண்காணிக்கும் என்று IT தெரிவித்துள்ளது.
News November 22, 2025
ஒட்டியாணம் குறித்து சில தகவல்கள்

வாரணாசி பட விழாவில், பிரியங்கா சோப்ராவின் ஒட்டியாணம், பண்டைய இந்தியாவின் பாரம்பரியத்தை நினைவூட்டியது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பெண்கள், இடுப்பில் ஓட்டியாணம் அணிந்து வருகின்றனர். பழங்கால கோயில் சிற்பங்களிலும் இதை நாம் பார்த்திருப்போம். ஒட்டியாணம் குறித்து பலரும் அறியாத சில தகவல்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


