News April 4, 2025
பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் முக்கிய சின்னமாக இருந்தவர் எனவும் தனது தேசபக்தி ஆர்வத்தினை திரைப்படங்களில் பிரதிபலித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உன்னத கலைஞர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த நடிகர் மனோஜ் குமார், பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News September 21, 2025
வரலாற்று சாதனை படைத்த ‘லோகா’!

மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி 23 நாள்களில் உலகம் முழுவதும் ₹267 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, மோகன்லால் நடித்த ‘L2 : எம்புரான்’ ₹265 கோடி வசூலித்ததே சாதனையாக கருதப்பட்டது. மோகன்லால், மம்முட்டி என பெரிய ஸ்டார்கள் இருக்க, ஒரு ஹீரோயின் முதன்மை கேரக்டரில் நடித்த படம், இவ்வளவு பெரிய வசூலை குவித்துள்ளது.
News September 21, 2025
ராகுலின் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு குழு

ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஆலந்தா தொகுதியில் 5,994 பேரின் பெயர்களை தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக நீக்கியதாகவும், இதுதொடர்பான ஆவணங்களையும் வழங்க மறுப்பதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அனைத்து ஆவணங்களையும் வழங்கியதாக தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்தது.
News September 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 465 ▶குறள்: வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. ▶பொருள்: முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.