News August 20, 2025

PM, CM பதவி பறிப்பு மசோதா: ஸ்டாலின் கண்டனம்

image

30 நாள்கள் சிறையில் இருந்தால், PM, CM பதவியை பறிக்கும் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு கருப்பு நாள், கருப்பு மசோதா என குறிப்பிட்ட அவர், இதுவே சர்வாதிகாரத்தின் தொடக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்கு திருட்டு விவகாரத்தை திசைதிருப்பவே இம்மசோதா கொண்டுவரப்பட்டதாகவும், ஜனநாயகத்தை அழிக்கும் மசோதா என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 19, 2026

மகாத்மா காந்தி பொன்மொழிகள்

image

*நீ உலகில் காண விரும்பும் மாற்றமாக நீயே மாறு. *அஹிம்சை என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த மிகப் பெரிய சக்தி. *எதிரியை அழிப்பதற்கு அல்ல, அவரது மனதை மாற்றுவதற்கே போராடு. *சுதந்திரம் என்பது விரும்பியதை செய்வது அல்ல; சரியானதை செய்வதே. *ஒரு தேசத்தின் முன்னேற்றம், அது பெண்களை எப்படி நடத்துகிறது என்பதிலே தெரியும்

News January 19, 2026

திருப்திப்படுத்துவது கோர்ட்டின் கடமை அல்ல: சந்திரசூட்

image

திருப்திப்படுத்துவது அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் சமநிலையைப் பாதுகாப்பதே கோர்ட்டின் கடமை என உமர்காலித் குறித்த கேள்விக்கு Ex SC தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். மேலும் UAPA போன்ற கடும் சட்டங்கள் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என விமர்சித்துள்ளார். டெல்லி கலவர வழக்கில் கைதான இமாம் & உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News January 19, 2026

அந்த 88 மணி நேரம்.. நினைவுகூர்ந்த ராஜ்நாத்

image

நாக்பூரில் ஒரு வெடிமருந்து ஆலை திறப்பு விழாவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட நாகஸ்திரா ட்ரோனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் பார்வையிட்டார். அப்போது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை சுமார் 88 மணி நேரம் நீடித்தது, அப்போது எதிர்கொண்ட தீவிரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மறுபுறம், புதிய போர் முறைகள் உருவாகி வருகின்றன என்று கூறினார்.

error: Content is protected !!