News December 20, 2025

PM மோடியை காண சென்ற BJP தொண்டர்கள் பலி

image

கொல்கத்தா அருகே ரயில் மோதிய விபத்தில், 4 BJP தொண்டர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தஹெர்பூரில் நடக்கும் PM மோடியின் பேரணியில் பங்கேற்க 40 BJP தொண்டர்கள் பஸ்ஸில் சென்றனர். சிறிது ஓய்வெடுக்க, கிருஷ்ணாநகர்-ரணகாட் ரயில்வே கிராஸிங் பகுதியில் அவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக ரயில் மோதி தூக்கி வீசப்பட்டனர். பனிப்பொழிவால் ரயில் வந்தது கூட அவர்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது.

Similar News

News December 25, 2025

உன்னாவ் வன்கொடுமை.. கண்ணீர் சிந்திய சோனியா

image

<<18660337>>உன்னாவ்<<>> வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் இன்று சோனியா, ராகுலை சந்தித்தார். தனது கதையை கேட்டு இருவரும் கண்ணீர் சிந்தியதாகவும், சொந்த மாநிலத்தில் இருந்தால், கொலை செய்யப்பட வாய்ப்புள்ளதால் காங்., ஆளும் மாநிலங்களில் தங்களை குடியமர்த்த உறுதியளித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் பேட்டியளித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் போராட மூத்த வழக்கறிஞரை ஏற்பாடு செய்யவும் ராகுல் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

ராசி பலன்கள் (25.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 25, 2025

‘பாரத் டாக்ஸி’ vs ஓலா, உபேர் என்ன வித்தியாசம்?

image

<<18661900>>‘பாரத் டாக்ஸி’<<>> சேவையை முதற்கட்டமாக டெல்லியில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதில் டிராக்கிங், 24*7 கஸ்டமர் சர்வீஸ், பல இந்திய மொழிகளில் சேவை வழங்கப்பட உள்ளது. அதேபோல் ola, Uber போன்ற தனியார் நிறுவனங்களை போல் இல்லாமல், டெல்லி போலீசுடன் இணைந்து டிரைவர், பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும், கமிஷன் ஏதும் வசூலிக்காமல், மொத்த பயண கட்டணமும் டிரைவருக்கு போய் சேரும்.

error: Content is protected !!