News January 11, 2026

PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

image

இலங்கை தமிழரின் உரிமையை பாதுகாக்க உரிய தூதரக நடவடிக்கையை PM மோடி எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில் அவர் இலங்கை அரசு இனப்பிரச்னையை தீர்க்கும் போர்வையில், ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக சாடியுள்ளார். இது ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்துவதால், அரசியல் சுயாட்சிக்கான தமிழரின் நியாயமான எண்ணங்கள் புறக்கணிக்கப்படலாம் என சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார்.

Similar News

News January 26, 2026

வெள்ளி இன்று கிலோவுக்கு ₹10,000 உயர்வு!

image

<<18960694>>தங்கத்துடன்<<>> போட்டிப் போட்டுக் கொண்டு வெள்ளி விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று(ஜன.26) வெள்ளி விலை 1 கிராம் ₹10 உயர்ந்து ₹375-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹3,75,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 7% உயர்ந்து ஒரு அவுன்ஸ்(28g) $108-க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

News January 26, 2026

ரேஸிங்கிற்கு பிரேக்: பைக் ரைடுக்கு கிளம்பிய AK!

image

கார், பைக் என இரண்டிலும் தீவிரம் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் அஜித். சினிமாவிற்கு சின்ன கேப் விட்டு, கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் அவர், மீண்டும் பைக் ரைடுக்கு புறப்பட்டு விட்டார். தற்போது துபாயில் உள்ள அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் & ஓமன் வழியாக பைக் ரைட் ஒன்றுக்கு கிளம்பியுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஐரோப்பாவில் அஜித் பைக் ரைட் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 26, 2026

மலேசியாவில் 500 தமிழ்ப் பள்ளிகள்: PM மோடி

image

நமது இந்தியச் சமூகம் மலேசியாவிலும் கலாசாரம், பண்பாட்டை போற்றுகின்றனர் என PM மோடி கூறியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் உள்ளதாகவும், அவற்றில் தமிழ் பாடத்துடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பிற பிராந்திய மொழிகளுக்கும் அங்கு முக்கியத்துவம் தரப்படுவதாக குறிப்பிட்டார்.

error: Content is protected !!