News November 1, 2025
PM-ன் பேச்சை பொருட்படுத்த கூடாது: எஸ்.வி.சேகர்

TN-ல் பிஹார் தொழிலாளர்களை துன்புறுத்துவதாக PM பேசியதற்கு எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார். பிஹார் சிறந்த மாநிலமாக இருந்தால் அங்கிருப்பவர்கள் ஏன் தமிழகத்திற்கு வர வேண்டும் என்றும் தமிழர்களுக்கு அங்கு வேலை கொடுக்கலாமே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் BJP வெற்றி பெறும் எண்ணத்தில், அங்குள்ளவர்களை உசுப்பேற்றும் விதமாக PM மோடி பேசுவதை, பொருட்படுத்தக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 1, 2025
எடை குறைய காலையில் இத 1 நிமிடம் பண்ணுங்க!

High Knees செய்வதால் கால் தசைகள் வலுப்பெற்று, ஒட்டுமொத்த உடல் எடையும் குறைய உதவுகிறது ★செய்வது எப்படி: முதலில் நேராக நிற்கவும். ஒரு காலை மடக்கி, முட்டியை மார்பு உயரம் வரும்படி உயர்த்தவும் ★பிறகு மறு காலை, அதேபோல் செய்யவும் ★இவ்வாறு இரு கால்களையும் மாற்றி, ஓடுவது போல தொடர்ந்து செய்யவும் ★தொடக்கத்தில் தினமும் 1 நிமிடம் வரை செய்து பழகி, பின்னர் மெதுவாக முடிந்தளவு நேரத்தை அதிகரிக்கலாம். SHARE IT.
News November 1, 2025
BREAKING: கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று (நவ.1) கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹4.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,750-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
News November 1, 2025
அதிமுகவில் இருந்து EPS நீக்கிய முக்கிய தலைவர்கள்

அதிமுகவிலிருந்து நேற்று Ex அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அதிமுகவை தன்வசப்படுத்திய EPS, சசிகலா, OPS, TTV உள்பட பல முக்கிய புள்ளிகளை நீக்கியுள்ளார். 2017-ல் CM ஆனது முதல் EPS நீக்கிய அதிமுக பெரும்புள்ளிகள் யார் யார் என்று, மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.


