News April 16, 2025

PM இன்டர்ன்ஷிப் திட்டம்: அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

image

PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் படித்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தொழில்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு 12 மாதங்களுக்கு மாதம் ₹5,000, ஒருமுறை மட்டும் ₹6,000 அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 4, 2026

அதிமுக Ex MLA திமுகவில் இணைந்தார்.. EPS அதிர்ச்சி

image

திண்டிவனம் அதிமுக முன்னாள் MLA ஹரிதாஸ், CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அண்மையில் தான் அதிமுக Ex MLA-க்கள் சின்னசாமி, மாதேஸ்வரன் ஆகியோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதேநேரம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் சமீபத்தில் இணைந்தார். அடுத்தடுத்து அதிமுக முக்கிய முகங்கள் கட்சி மாறுவது EPS-க்கு அதிர்ச்சியளித்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News February 4, 2026

லோக் சபாவில் கடும் அமளி.. அவை ஒத்திவைப்பு

image

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, 2-வது நாளாக லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நேற்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நேற்று அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து இன்றும் எதிர்க்கட்சி MP-க்கள் அமளியில் ஈடுபட்டதால் லோக் சபா 12 மணிவரை ஒத்தி வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

News February 4, 2026

ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு ஏன் அச்சம்? CM

image

நாடாளுமன்றத்தில் <<19042390>>ராகுல் காந்தி<<>> கேட்கும் கேள்விகளை கண்டு மத்திய அரசு ஏன் அஞ்சுகிறது என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக MP-க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் லோக்சபாவில் 8 MP-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!