News September 30, 2025

நோட் பண்ணிக்கோங்க.. நாளை முதல் UPI-ல் இந்த சேவை கட்!

image

நண்பர் ஒருவரிடம் இருந்து பணம் பெற, UPI-ல் Money Request பண்ணும் ஆப்ஷன் இருந்தது. அதனை நாளை (அக்டோபர் 1) முதல் நீக்குவதாக NPCI தெரிவித்துள்ளது. இது, Phonepe, Google Pay, Paytm என அனைத்து UPI ஆப்களிலும் அமலுக்கு வருகிறது. இந்த சேவை பல இடத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தாலும் தற்போது அதிகரித்துவரும் பண மோசடிகளை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவுகளை எடுக்கப்பட்டு உள்ளது.

Similar News

News September 30, 2025

வரலாறு காணாத விலை உயர்வு.. இதுவே முதல்முறை

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ₹1 உயர்ந்து ₹161-க்கும் கிலோ வெள்ளி ₹1,61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை இதுவரை இல்லாத உச்சமாக ₹16 ஆயிரம் உயர்ந்துள்ளது. வரும் நாள்களிலும் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

News September 30, 2025

கைதான TVK நிர்வாகிகளுக்கு மருத்துவ பரிசோதனை

image

கரூர் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, பதியப்பட்ட வழக்கில் அக்கட்சி நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிடலில் மருத்துவ பரிசோதனை செய்யபட்டது. இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹாஸ்பிடலுக்கு அழைத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 30, 2025

உங்களுக்கு இந்த கெட்ட பழக்கங்கள் இருக்கா?

image

உங்களுக்கு புகைபிடித்தல், மது அருந்துதல், அதிகமாக Fast food சாப்பிடும் பழக்கம் இருக்கா? இந்த பழக்கங்களில் இருந்து விடுபட சில வழிகள் இருக்கிறது. இந்த கெட்ட பழக்கங்களில் இருந்து ஒரே நாளில் விடுபட முடியாது என்றாலும், இதனை நாளடைவில் கைவிடலாம். அது எப்படி என்பதை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!