News April 23, 2025
பிளீஸ் இப்படி பண்ணாதீங்க.. பவித்ரா லட்சுமி வேதனை

தன்னை பற்றிய வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என நடிகை பவித்ரா லட்சுமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். என்னுடைய தோற்றம் குறித்து பலமுறை விளக்கம் அளித்த பின்னும் விமர்சனங்கள் தொடர்வதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். தனக்கு உடல்நல சீரியஸான பிரச்னைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பெயரை கெடுக்கும் வகையிலான செய்திகளை பரப்ப வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News December 30, 2025
கோவை அருகே கோர விபத்து: பெண் பலி

கோவை மாவட்டம் ராசிபாளையம் அருகே அதிவேகமாக வந்த புல்லட் மோதியதில் அவ்வழியே நடந்து சென்ற பெண் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 30, 2025
சற்றுமுன்: விஜய்க்கு புதிய சிக்கல்

கரூர் விவகாரம் தொடர்பாக இன்று 2-வது நாளாக டெல்லி CBI அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். இந்நிலையில், ஜனவரியில் விஜய்க்கு CBI சம்மன் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பொங்கலுக்கு பிறகு விஜய் விசாரணைக்கு ஆஜராகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
News December 30, 2025
விஜய்க்கு முதல் முறையாக EPS பதில்

புதுச்சேரி பரப்புரையில், களத்தில் இல்லாதவர்களை எல்லாம் விமர்சிக்க முடியாது என விஜய் கூறியிருந்தார். இந்நிலையில், இன்றைக்கு யார் யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள், புதிதாக கட்சி தொடங்கியவரும் பேசுகிறார் என EPS மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும் KP முனுசாமி, செல்லூர் ராஜு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் விஜய்யை விமர்சித்து வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.


