News March 28, 2024
அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்

ஒரே அணிக்காக அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியல்:
▶விராட் கோலி (RCB) – 224, ▶எம்.எஸ்.தோனி (CSK) – 205, ▶கிரண் பொல்லார்ட் (MI) – 189, ▶ரோஹித் ஷர்மா (MI) – 183, ▶சுரேஷ் ரெய்னா (CSK) – 176, ▶ஏ.பி.டிவில்லியர்ஸ் (RCB) – 156, ▶சுனில் நரேன் (KKR) – 149, ▶ரவீந்திர ஜடேஜா (CSK) – 143, ▶ஹர்பஜன் சிங் (MI) – 136, ▶லசித் மலிங்கா (MI) – 122 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
Similar News
News January 5, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹8,640 உயர்ந்தது

ஆபரணத் <<18766340>>தங்கம் <<>>சவரனுக்கு ₹640 உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ₹8 உயர்ந்து ₹265-க்கும், கிலோ வெள்ளி ₹8,000 உயர்ந்து ₹2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை விலை எதிரொலியால், வரும் நாள்களில் நம்மூரிலும் விலை தாறுமாறாக உயரும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
News January 5, 2026
EPS-க்கு அருகதை இருக்கா? சிவசங்கர்

திமுகவை கார்ப்பரேட் கம்பெனி என கூறும் அதிமுக, எப்போதோ அடிமை கம்பெனியாக மாறிவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் சாடியுள்ளார். 55,000 லேப்டாப்களை வழங்காமல் வீணடித்த EPS-க்கு, திமுக அரசின் லேப்டாப் திட்டத்தை பற்றி பேச அருகதை இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு திட்டங்கள் தன்னால் தான் நடந்தது எனக்கூறி வரும் EPS, ‘நானே எல்லாம் செய்பவன்’ என்ற கடவுள் மனப்பான்மையில் வாழ்ந்து வருவதாகவும் விமர்சித்தார்.
News January 5, 2026
இரும்பு கை மாயாவியாகும் அல்லு அர்ஜுன்

லோகேஷ் கனகராஜின் கனவான ‘இரும்பு கை மாயாவி’ படத்தில் நடிக்க சூர்யா முதல் ஆமிர் கான் வரை பலரும் போட்டி போட்டனர். ஆனால், ‘கூலி’ படத்தின் ரிசல்ட் அனைத்தையும் மாற்றிவிட்டது. தற்போது, அந்த கதையின் மீது நம்பிக்கை வைத்து அல்லு அர்ஜுன் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டின் 2-ம் பாதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் PAN இந்தியன் ஹிட் கொடுப்பாரா லோகி?


