News August 13, 2024

காதல் நகரில் காதலை வெளிப்படுத்திய வீரர்கள்

image

வீரர்களால் அதிக ப்ரபோசல்கள் செய்யப்பட்ட ஒலிம்பிக்ஸ் என்ற சாதனையை 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் படைத்துள்ளது. ‘காதல் நகரம்’ என்று அழைக்கப்படும் பாரிஸில், மொத்தம் 17 நாள்கள் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தொடரில் காதலை வெளிப்படுத்தும் 9 ப்ரபோசல்கள் நடந்த களமாக அந்நகரம் மாறியது. வீரர்கள் வெற்றியுடன் தங்கள் அன்பையும் பகிர்ந்துகொண்டது ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் கவர்ந்தது.

Similar News

News March 6, 2026

தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $88 (இந்திய மதிப்பில் ₹8,077) குறைந்து $5,089.47-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 குறைந்து $83.04-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 6, 2026

திமுகவிடம் DCM பதவி கேட்டாரா பிரேமலதா?

image

தேமு​தி​க​வுக்கு DCM பதவி வேண்​டும் என திமுகவிடம் பிரேமலதா கேட்​ட​தாக​வும், இதனால்தான் கூட்டணி தாமதமானது எனவும் சமீப​கால​மாக தகவல் பரப்​பப்​பட்டு வந்​தது. அதற்கு மறுப்பு தெரிவித்த பிரேமலதா விளக்​கமும் அளித்​திருக்​கி​றார். தாங்​கள் இது வேண்​டும், அது வேண்​டும் என்று யாரிட​மும் அடம் பிடித்​தது கிடை​யாது எனவும், மற்ற கட்​சிகளை போலவே தங்​களுக்​கான உரிய இடத்தை தாங்​கள் கேட்டதாகவும் கூறியுள்ளார்.

News March 6, 2026

கூட்டணி விஷயத்தில் ஸ்டாலின் அஞ்சினார்: TTV

image

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என TTV தெரிவித்துள்ளார். திமுக-காங்., கூட்டணியில் அடித்துக் கொண்டு தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்தது போல் NDA கூட்டணியில் நடக்காது; சுமுகமாகவே பேச்சுவார்த்தை முடியும் எனக் கூறினார். மேலும், தவெகவுடன் காங்., சென்றுவிடுமோ என அச்சத்தில் இருந்த ஸ்டாலின் பேச்சுவார்த்தை முடிந்தபிறகு சமிக்ஞை காட்டி நிம்மதியை வெளிப்படுத்தியதாகவும் பேசினார்.

error: Content is protected !!