News March 30, 2025
அரிசியுடன் பிளாஸ்டிக் அரிசி கலப்பு.. அரங்கேறும் புது மோசடி

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூட்டை அரிசி வாங்குவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதை வைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. 26 கிலோ மூட்டையில் கால் கிலோ வரை பிளாஸ்டிக் அரிசியை கலந்து விற்கிறது. வேக வைக்கும் போதும், சுத்தம் செய்யும் போதும் பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடித்து தவிர்த்து விட வேண்டும். இல்லையேல் அதை சாப்பிடும் ஆபத்து உள்ளது. உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா?
Similar News
News January 18, 2026
மகன் திருமணத்திற்கு பின் எனக்கு திருமணம்: பார்த்திபன்

தனது மகனுக்கு ஒரு திருமணம் முடிந்துவிட்டால், அதன்பின் தனக்கென ஒரு துணையைத் தேடிக்கொள்ள நினைப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். புதிய பாதை படத்தின் மூலம் இயக்குநர் & நாயகனாக அறிமுகமான பார்த்திபன், 1990-ல் நடிகை சீதாவை மணந்த நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்நிலையில், தனக்கான துணை ஒரு புரிதலான தோழியாகவோ அல்லது ஒரு சிறந்த கம்பெனியனாகவோ இருக்கலாம் என்று விவரித்துள்ளார்.
News January 18, 2026
ராசி பலன்கள் (18.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 18, 2026
நாடு முழுவதும் தாக்குதல்… உளவுத்துறை எச்சரிக்கை!

ஜனவரி 26-க்கு முன்னதாக, காலிஸ்தான் மற்றும் வங்கதேச பயங்கரவாதக் குழுக்கள் நாடு முழுவதும் பல நகரங்களை தாக்க முயற்சி செய்யலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த தாதாக்கள், வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தானிகளுக்கு கூலிப்படையாக செயல்படுவதாகவும், அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்பைக் சீர்குலைக்க கிரிமினல் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


