News October 12, 2025

கொசுக்களை விரட்டும் சக்தியுள்ள செடிகள்

image

வீட்டில் எத்தனையோ தொல்லைகள் இருந்தாலும் கொசுத்தொல்லைதான் நம்மை நிம்மதியாக தூங்கவிடாது. ஆனால் இந்த செடிகள் இருந்தால் கொசுக்கள் உங்கள் வீட்டை அண்டவே அண்டாதாம். யூக்கலிப்டஸ், ரோஸ்மேரி, சாமந்தி, லாவெண்டர், புதினா உள்ளிட்ட செடிகள் வீட்டில் இருந்தால், அதன் வாசனையால் கொசுக்கள் வீட்டிற்குள் வராதாம். உங்க வீட்டில் இதில் ஏதாவது செடி இருக்கா?

Similar News

News October 13, 2025

International Roundup: இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிப்பு

image

*காசா அமைதி உடன்படிக்கை எகிப்தில் இன்று கையெழுத்தாக உள்ளது. *மடகாஸ்கரில் போராட்டக்காரர்களுடன் இணைந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தெரிவித்துள்ளார். *தங்கள் வசம் உள்ள மொத்த இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. *மெக்சிகோ வெள்ளத்தில் 44 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

News October 13, 2025

பிஹாரில் பரவும் மர்ம நோய்.. அடுத்தடுத்து உயிரிழப்பு

image

பிஹாரின் டூத் பனியா கிராமத்தில் பரவும் மர்ம நோயால், இளைஞர்கள் குறைந்த வயதிலேயே அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமவாசிகள் 40 வயதை அடைவதே மிகவும் சிக்கலான ஒன்றாக மாறி வருவது India Today நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மத்திய மருத்துவ குழு இன்று அக்கிராமத்திற்கு செல்ல உள்ளது. அதேபோல், உள்ளூர் மருத்துவ குழு அங்குள்ள நீரை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளது.

News October 13, 2025

நடிகர்கள் நாடாளுவர்கள் என நினைப்பது தவறு: பாஜக

image

சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக நாட்டை ஆளுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர் படத்தை தியேட்டரில் கொண்டாடுவதோடு முடித்துக்கொள்ளுங்கள், வாக்குகளை பாஜக கூட்டணிக்கு மட்டும் செலுத்துங்கள் என கூறியுள்ளார். வாக்குகள் பிரிவதால் வெற்றி பெறலாம் என நினைக்கும் திமுகவின் எண்ணத்துக்கு நாம் வலுசேர்க்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!