News October 4, 2025
கேப்டன் பதவியில் இருந்து ரோஹித்தை நீக்க திட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்டில் கேப்டனாக உள்ள சுப்மன் கில் ODI-க்கு கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் மற்றும் டி20-களில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் ODI மட்டுமே விளையாடி வருகிறார். கில் தலைமையில் 2027 உலகக்கோப்பையை எதிர்கொள்ள BCCI திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது.
Similar News
News March 14, 2026
கேஸ் சிலிண்டர் புக்கிங்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாகப் பலரும் SM-ல் புகார் அளித்துள்ளனர். இதனால், LPG கேஸ் விநியோகம் செய்யும் ஏஜென்சிகளின் வாசலில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் சிரமமின்றி IOC, BPC, HPC நிறுவனங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய மத்திய அரசு புதிய எண்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை மேலே உள்ள போட்டோவை SWIPE செய்து பாருங்க.
News March 14, 2026
விஜய் எடுக்கப்போகும் முடிவு.. என்ன நடக்கும்?

அதிமுக கூட்டணிக்கு தவெக செல்லும் என்பதே இன்றைய ஹாட் டாபிக். ஒருவேளை விஜய் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், தொடக்கம் முதலே கொள்கை எதிரி என கூறிவந்த பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு சென்றுவிட்டார் என பேச்சு எழும். செல்லவில்லையென்றால், திமுக, அதிமுக இரு கூட்டணிகளுக்கும் வாக்கு வங்கியில் பாதிப்பு உண்டாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News March 14, 2026
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

தங்கத்தை போன்றே இன்று (மார்ச் 14) வெள்ளி விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் ₹10 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


