News October 27, 2025
அரசு வங்கிகளில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க திட்டம்?

SBI, IOB உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை 20%-ல் இருந்து 49%-ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், RBI-யும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம், மூலதனம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு நிகராக தனியார் பங்குகள் வைத்திருக்கலாமா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 28, 2025
டேங்கர் விமானங்களை வாங்குகிறதா IAF?

நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்குவதற்கு IAF தயாராகி வருகிறது. இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான Israel Aircraft Industries நிறுவனத்திடமிருந்து ₹8,000 கோடிக்கு IAF ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் 6 டேங்கர் விமானங்களை வாங்க முடியும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், 6 பழைய, இரண்டாம் நிலை போயிங் 767 விமானங்கள் டேங்கர் விமானங்களாக மாற்றியமைக்கப்படும்.
News October 28, 2025
இந்திய அணியுடன் இணைந்த ஷஃபாலி வர்மா

மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், 21 வயதான அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகிய நிலையில், மாற்று வீராங்கனையாக ஷெபாலி வர்மா அணியுடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஷெபாலி வர்மா களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
News October 28, 2025
பிஹார் SIR-க்கே இன்னும் விடை கிடைக்கவில்லை: காங்கிரஸ்

பிஹாரில் SIR மேற்கொள்ளபட்டபோது எழுந்த கேள்விகளுக்கே ECI-யிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என காங்., தெரிவித்துள்ளது. முந்தைய காலங்களில் SIR நடக்கும் போது புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, தேவையில்லாதவர்கள் நீக்கப்பட்டனர். ஆனால் பிஹாரில் ஒருவரை கூட புதிதாக சேர்க்காமல், 65 லட்சம் பேரை நீக்கியுள்ளனர். இந்த சூழலில்தான் 12 மாநிலங்களில் SIR நடத்தப்பட உள்ளதாகவும் அக்கட்சி சாடியுள்ளது.


