News April 23, 2025
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்?

பிரதமர் மோடியின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்.19-ம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கு மோடி பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நேற்று பஹல்காமில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை அரங்கேறியிருக்கின்றனர்.
Similar News
News November 29, 2025
ராசி பலன்கள் (29.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 28, 2025
TVK-வில் Ex அமைச்சர்கள் இணையவுள்ளனர்: KAS

முதல்வராகவும், பொதுச்செயலாளராகவும் முன்மொழிந்த தன்னை, EPS அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதாக செங்கோட்டையன் சாடியுள்ளார். மேலும் EPS தலைமையில் ஒரு தேர்தலிலாவது அதிமுக வெற்றி பெற்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டிசம்பரில் தவெக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமையும் என்றும், இன்னும் சில Ex அமைச்சர்களும் விஜய்யுடன் இணைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
News November 28, 2025
பூத் ஏஜெண்டுகள்.. விஜய் முக்கிய உத்தரவு

தவெக பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். பூத் ஏஜெண்டுகளுக்கான விண்ணப்பங்களை விரைவில் பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்பி வைக்குமாறு தவெக தரப்பில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு ஏஜெண்டு என்ற எண்ணிக்கையை 10-ஆக உயர்த்த தவெக அண்மையில் அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில், பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


