News March 10, 2025
ரன்வேயில் உரசிய விமானம்.. சென்னை ஏர்போர்ட்டில் ஷாக்

சென்னை வந்திறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளுக்கு உயிர் பயம் ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மும்பையில் இருந்து 192 பேருடன் வந்த விமானம், லேண்ட் ஆனபோது ஓடுபாதையில் அதன் வால் உரசியிருக்கிறது. தீப்பொறி எழும்ப, பைலட் சட்டென சுதாரித்து விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமான பாதுகாப்பு ஆணையம் விசாரிக்கிறது. பயணிகளிடமும் Sorry கேட்டுள்ளனர்.
Similar News
News March 10, 2025
லலித் மோடியின் வனுவாட்டு பாஸ்போர்ட் கேன்சல்!

நிதி மோசடியில் சிக்கி வெளிநாடு தப்பிச்சென்ற IPL முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வழங்கப்பட்ட வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்ய,
அந்நாட்டின் பிரதமர் ஜோதம் நபாட் உத்தரவிட்டுள்ளார். அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது, எந்த குற்றப்பின்னணியும் தெரியவில்லை. ஒரு வேளை இன்டர்போல் அலர்ட் விடுத்திருந்தால், விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
News March 10, 2025
முத்துவேல் பாண்டியன் ரிட்டர்ன்ஸ்! ஸ்பெஷல் போஸ்டர்!

ரஜினியின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நெல்சன் 2 ஆம் பாகத்தை கையில் எடுத்துள்ளார். படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
News March 10, 2025
யார் அந்த சூப்பர் முதல்வர்? அமைச்சர் போட்ட புது குண்டு

தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்கப்படாதது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்க தமிழக முதல்வர் முதலில் சம்மதித்ததாக கூறினார். ஆனால், சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டதாகவும், அந்த சூப்பர் முதல்வர் யார் என கனிமொழிதான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.