News December 4, 2024

இந்திரா காந்தியை போல் பாதலை கொல்லத் திட்டம்?

image

தங்கள் மதத்தை அவமதிப்பவர்களை சீக்கிய பற்றாளர்கள் மன்னிப்பதில்லை. இதுவே Ex PM இந்திரா படுகொலைக்கும் காரணமாக கூறப்பட்டது. சுக்பீர் சிங் பாதல் மீதான கொலை முயற்சியும் இதன் வெளிப்பாடு தான். பஞ்சாபில் SAD ஆட்சியில், சீக்கிய மதத்தை அவமதித்தவர்களுக்கு அன்றைய CM பாதல் மன்னிப்பு வழங்கியது தவறு என, பொற்கோயிலில் சேவை தண்டனை அளித்தது Akal Takht அமைப்பு. அதை நிறைவேற்றும் போது, அவரை கொல்ல முயற்சி நடந்துள்ளது.

Similar News

News November 2, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 507 ▶குறள்: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். ▶பொருள்: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

News November 2, 2025

மாவோயிஸ்ட் பயங்கரவாதம்: மோடி சூளுரை

image

11 ஆண்டுகளுக்கு முன்பு 125 ஆக இருந்த மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, தற்போது 3 ஆக குறைந்துள்ளது என PM மோடி தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து இந்தியா விடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என சூளுரைத்தார். இந்த வன்முறை மிகுந்த விளையாட்டில், பழங்குடி மக்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள மோடியால் அனுமதிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

News November 2, 2025

மாரி செல்வராஜுக்கு எதிராக பொங்கிய ஆராத்யா

image

மாரி செல்வராஜின் படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கு, டெடிகேட்டிவான ஆர்ட்டிஸ்டை தான் நான் எடுப்பேன், அது மலையாளி என்றால் கூட பிரச்சனையில்லை என மாரி விளக்கம் கொடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை ஆராத்யா, தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்புள்ள நடிகைகள் உள்ளோம், எங்களுடைய உழைப்பு உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் வந்துசேரவில்லையா என கேட்டுள்ளார்.

error: Content is protected !!