News March 27, 2024
தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

தேர்தல் பிரசாரத்தின்போது குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாச வேலைகளுக்கு தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு குண்டுவெடிப்பை சுட்டிக்காட்டி அக்கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும், அதில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
Similar News
News March 19, 2026
தவெகவா? தனித்து போட்டியா? ராமதாஸ் யோசனை

தேர்தல் தேதியே அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, கூட்டணி குறித்த முடிவை ராமதாஸ் இதுவரை எடுக்கவில்லை. அதிமுக, திமுக கூட்டணி கதவு, அவருக்கு அடைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அடுத்த நகர்வு குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். இப்போதைக்கு தவெகவுடன் செல்வது (அ) தனித்து போட்டியிடுவது இந்த இரு வாய்ப்புகள் மட்டுமே ராமதாஸ் முன் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என தவெக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவளித்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை விஜய்யால் மட்டுமே கொடுக்க முடியும் என மனதார நம்புவதாக அக்கட்சியின் மாநில தலைவர் நாகூர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் தவெகவின் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 19, 2026
அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


