News August 20, 2024
ஆண்டுக்கு 4 படங்களில் நடிக்க திட்டம்: பிரசாந்த்

எதிர்காலத்தில் ஆண்டுக்கு நான்கு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். பள்ளி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், குறிப்பிட்ட இயக்குநர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பை சேர்ந்த இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரசாந்த் நடிப்பில் நீண்ட வெளியான அந்தகன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Similar News
News March 23, 2026
கேப்டன் குடும்பத்துக்கு கார் வாங்க கூட தகுதி இல்லையா?

பிரேமலதா குடும்பத்தினர் ₹3 கோடி மதிப்பிலான Land Rover defender கார் முன்னால் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது. இந்த கார் திமுக கூட்டணியில் இணைந்தபிறகு பிரேமலதா வாங்கியதாக சிலர் விமர்சித்தனர். இந்நிலையில், அந்த காரை ஒன்றரை வருடத்திற்கு முன்பே வாங்கியதாக தெரிவித்த பிரேமலதா, கேப்டன் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்க கூட தகுதியில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 23, 2026
7 வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹30,800 குறைந்தது

தங்கம் வாங்க நினைத்தோருக்கு இம்மாதம் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலை மளமளவென குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் காலை நேர வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 1 அவுன்ஸ் $289 குறைந்து $4,195 ஆக உள்ளது. கடந்த ஜன.29-ம் தேதி 1 சவரன் ₹1,34,400-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹30,800 சரிந்து ₹1,03,600 ஆக உள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாம்.
News March 23, 2026
AK 47 துப்பாக்கிகளுக்கு லோகி கனெக்ஷன்.. போலீஸ் ஷாக்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னை அசோக் நகரில் வாகன சோதனையில் 10-க்கும் மேற்பட்ட ‘AK 47’ துப்பாக்கிகளுடன் வேன் ஒன்று சிக்கியது. அதிர்ந்து போன போலீசார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், இவை டம்மி துப்பாக்கிகள் என்பதையும், லோகேஷ் கனகராஜ் நடித்துவரும் ‘DC’ பட ஷூட்டிங்கிற்காக கொண்டு வரப்பட்டவை என்பதையும் போலீஸ் உறுதி செய்தனர். இதையடுத்து லைசன்ஸை சரிபார்த்தபின் அந்த வேனை விடுவித்தனர்.


