News October 10, 2025
பிஹார் தேர்தலில் PK எடுத்த புது ரூட்டு!

பிஹாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் EX IPS அதிகாரிகள், டாக்டர்கள், வழக்கறிஞர், கணிதவியல் நிபுணர் என நன்கு பரிச்சயமான படித்த நபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரசாந்த் கிஷோர், கட்சி தொடங்கி முதல்முறையாக தேர்தல் களம் காண உள்ள நிலையில், பாரம்பரிய கட்சிகளை காட்டிலும் வேறுபட்ட முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
Similar News
News October 10, 2025
அக்.16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது

அக்.16 – 18-ம் தேதிக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான மழை பொழியும் என்றும் கணித்துள்ளது. மேலும், தீபாவளி நாளில் மழை பெய்யுமா என்பதை 5 நாள்களுக்கு முன்பு தான் கூற முடியும் என IMD தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். அக்.1 முதல் இன்று வரை வழக்கத்தை விட (17 செ.மீ) குறைந்த அளவே (5 செ.மீ) மழை பெய்துள்ளது.
News October 10, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
News October 10, 2025
விஜய் பரப்புரையில் முக்கிய திருப்பம்!

கரூரில் விஜய் வருவதற்கு முன்பே தண்ணீர், உணவின்றி பலர் மயங்கி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாக SC-ல் TN அரசு தெரிவித்துள்ளது. மேலும், விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே காரணம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், விஜய் தண்ணீர் பாட்டில் வீசிய இடத்தில் நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. விஜய் வருவதற்கு முன்பே பலர் மயங்கிய நிலையில், போலீசார் தொடர்ந்து அனுமதி அளித்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.