News October 31, 2025
பிஹார் பரப்புரையில் PK கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை

பிஹாரின் மொகமா பகுதியில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது, 2 கான்வாயில் இருந்த கட்சி நிர்வாகிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாற, துலார்சந்த் யாதவ் என்ற நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அந்த இடமே பரபரப்பு களமாக மாற, போலீஸார் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Similar News
News October 31, 2025
இன்று நள்ளிரவு முதல் அமல்.. முக்கிய அறிவிப்பு

✱CRED, MobiKwik போன்ற 3-ம் தரப்பு செயலிகள் வழியாக SBI கார்டு வைத்து பள்ளி/கல்லூரி கட்டணங்களை செலுத்தினால், பரிவர்த்தனை தொகையில் 1% கட்டணமாக வசூலிக்கப்படும் ✱ஆதார் புதுப்பித்தலை எளிதாக ஆன்லைனில் மாற்றலாம். அதே போல, Biometric அப்டேட் செய்யும் கட்டணம் ₹100-ல் இருந்து ₹125 ஆக உயர்த்தப்படுகிறது ✱இனி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகள், லாக்கர்களுக்கு 4 நாமினிகளை நியமிக்கலாம். SHARE IT.
News October 31, 2025
எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்

தூய்மை இந்தியா முன்னெடுப்பு இருந்தாலும், நாடு தூய்மையான பாடில்லை. குப்பை தொட்டியை தவிர அனைத்து இடங்களிலும் கிடக்கும் குப்பைகள், நீர் நிலைகளில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் என மோசமாகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இதற்காக வாரணாசி மாநகராட்சி கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ரோட்டில் எச்சில் துப்பினால், குப்பை போட்டால் ₹200 அபராதம் என அறிவித்துள்ளது. இங்கும் இது அமலுக்கு வந்தால் எப்படி இருக்கும்?
News October 31, 2025
தவெகவுக்கு காத்திருக்கும் அடுத்த சவால்

SIR பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது TN அரசு. க, தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டத்தில் விஜய் பங்கேற்றால், அது அதிமுக-தவெக கூட்டணி கணக்கில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஒருவேளை பங்கேற்கவில்லை எனில் ’பாஜக பி டீம்’ என திமுக, தவெகவை விமர்சிக்கலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். SIR-ஐ ஆதரிக்கவில்லை என தவெக கூறினாலும், கூட்டத்தில் பங்கேற்குமா என கேள்வி எழுந்துள்ளது.


