News August 5, 2024
சீன முதலீடு தொடர்பாக பியூஷ் கோயல் விளக்கம்

சீன முதலீடுகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார். சீன முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்ததை அரசின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறிய அவர், எல்லைப் பிரச்னையில் தீர்வு காணும்வரை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது தவிர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 24, 2026
நெருக்கடி.. கடந்த கால சிரமங்கள் மீண்டும் ஏற்படுமா?

போர் நெருக்கடியை கோவிட் போல எதிர்கொள்ள வேண்டும் என்ற PM மோடியின் கருத்து கவலையளிக்கிறது. இதனால், மீண்டும் கடினமான காலங்கள் ஏற்படுமா என்ற கேள்வி மக்களை வாட்டி வதைக்கிறது. போர் நீடித்து, வரும் நாட்களில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டால் என்னவாகும்? இறக்குமதி & ஏற்றுமதி தடைப்பட்டால் என்னவாகும்? இந்த தாக்கம் விலைவாசி, வேலைவாய்ப்புகளையும் பாதித்தால் நிலைமை என்னவாகும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
News March 24, 2026
எரிசக்தி இறக்குமதியை விரிவுபடுத்தியுள்ளோம்: PM

நாட்டில் எரிசக்தி விநியோகம் சீராக இருப்பதாக PM மோடி தெரிவித்தார். இந்தியா தனது LPG தேவைகளில் கிட்டத்தட்ட 60%-ஐ இறக்குமதி செய்வதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் எரிசக்தி இறக்குமதியை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாக விரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவசர காலத்துக்கான பெட்ரோலிய இருப்பு 53 லட்சம் மெட்ரிக் டன் உள்ளதாகவும், அவற்றை 65 லட்சமாக விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
News March 24, 2026
தேர்தலில் கம்யூனிஸ்ட் கரைந்த கதை

1989 முதல் பெரும்பாலான சட்டப்பேரவை தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் களம் கண்ட CPM, தற்போது தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுகிறது. 1989-21( திமுக+), 1991-22(திமுக+), 1996-40(மதிமுக+), 2001-8(அதிமுக+), 2006-13(திமுக+), 2011-12(அதிமுக+), 2016-25( மக்கள் நலக்கூட்டணி), 2021-6(திமுக+), 2026-5(திமுக+). கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சீட் குறைக்கப்பட்டது பற்றி உங்க கருத்து?


