News April 13, 2025
7 மாத குழந்தையை கடித்துக் கொன்ற பிட்புல் நாய்

அமெரிக்காவில் 7 மாத பெண் குழந்தையை பிட்புல் நாய் கடித்து காென்றுள்ளது. ஓஹியாேவைச் சேர்ந்த கேமரூன் டர்னர், மெக்கன்சி கோப்லி, தம்பதிக்கு எலிசா என்ற 7 மாத குழந்தை இருந்தது. வீட்டில் 3 பிட்புல் நாய்களை வளர்த்த நிலையில், அதில் ஒன்று குழந்தையை கடித்து குதறியது. இதில் குழந்தை உயிரிழந்தது. குழந்தையை நாய் ஏன் கடித்தது எனத் தெரியாத நிலையில், 3 நாய்களை போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.
Similar News
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News July 5, 2025
BREAKING: இபிஎஸ்-க்கு Z+ பாதுகாப்பு

இபிஎஸ்-க்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய 10 NSG கமாண்டோக்கள், 55 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அண்மையில் இபிஎஸ்-க்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் இரு முறை கொலை மிரட்டல் விடுத்தது கவனிக்கத்தக்கது.
News July 5, 2025
வாட்டர் பெல்: பெற்றோர் முக்கிய வேண்டுகோள்

‘வாட்டர் பெல்’ எனும் திட்டம் தமிழக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீர் பருகுவதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஸ்டீல் (அ) செம்பு பாட்டில்களைக் கொண்டுவர அரசு பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம், தமிழை வளர்க்கும் தமிழக அரசு ‘தண்ணீர் மணி’ என்று திட்டத்தின் பெயரை மாற்ற பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.