News December 22, 2025

Piracy-ல் படம் பார்ப்பவர்களுக்கு வார்னிங்

image

டெலிகிராம், ஃப்ரீ வெப்சைட்டுகளில் Piracy-ல் படம் பார்ப்பவர்களை மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இலவசமாக கிடைக்கிறது என அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள், ஆப்களில் பதிவிறக்கம் செய்தால், உங்களது வங்கி கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. பல லட்சம் பேர் பயன்படுத்தும் ‘Pikashow’ செயலியும் பாதுகாப்பானது இல்லை என்றும் கூறியுள்ளது.

Similar News

News December 30, 2025

நடிகை நந்தினி மரணம்.. கண்ணீர் அஞ்சலி

image

நடிகை நந்தினியின் தற்கொலை சின்னத்திரை நடிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு, சக நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நந்தினியுடன் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோக்களை SM-ல் பகிர்ந்து நடிகை ஸ்வேதா சுப்பிரமணியன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், நீ(நந்தினி) எப்போதும் எங்களது இதயங்களில் வாழ்வாய் என சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார். (போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து பாருங்க)

News December 30, 2025

இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது: விஜய்

image

திருத்தணியில் வடமாநில இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருள்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

News December 30, 2025

மதம் மாறியதால் நடந்த கொடுமை!

image

இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்புவது என்பது மனிதகுலத்தின் மாபெரும் கடமைகளில் ஒன்று. ஆனால் சத்தீஸ்கரில் 65 வயதான புனியா பாய் என்பவர் கிறிஸ்தவத்திற்கு மாறினார் என்ற ஒரே காரணத்திற்காக அவரது இறந்த உடலை 3 நாள்களாக அடக்கம் செய்ய ஊர்க்காரர்கள் அனுமதிக்கவில்லை. இறுதியாக புனியாவின் குடும்பத்தினர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய பிறகே இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது. மனிதம் மரித்துவிட்டதா?

error: Content is protected !!