News December 31, 2024
உடனடியாக பதவி விலக வேண்டும்: பினராயி

கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறிய மகாராஷ்டிரா அமைச்சர் நிதிஷ் ரானேவுக்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் மீது எடுத்துக்கொண்ட உறுதி மொழியை அமைச்சர் மீறியுள்ளதாகவும், சங்பரிவாரால் திட்டமிடப்பட்டு பரப்பப்படும் வெறுப்பு பரப்புரைகளை கேரள மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள் என்றும் கூறினார். நிதிஷ் உடனடியாக பதவி விலகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 3, 2025
மீண்டும் சதம் அடித்து அசத்திய விராட் கோலி

இக்கட்டான நிலையில் களமிறங்கிய விராட் கோலி SA-வுக்கு எதிரான ODI தொடரில் 2-வது சதத்தை அடித்து அசத்தியுள்ளார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட், 70 ரன்களை கடந்தவுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த போட்டியில் சதம் அடித்து இந்தியா 350 ரன்களை எட்ட உதவியது போல், இதிலும் இமாலய இலக்கை எட்ட தொடர்ந்து விளையாடி வருகிறார்.
News December 3, 2025
ஏக்கருக்கு ₹40,000 இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹8,000 வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சம்பா, தாளடி பயிர்களுக்கு விவசாயிகள் இதுவரை ஏக்கருக்கு ₹30,000 வரை செலவு செய்திருக்கும் நிலையில், அரசின் நிவாரணம் போதாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 3, 2025
பேய் மழை வெளுக்கும்.. 25 மாவட்டங்களில் அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என IMD கணித்துள்ளது. இதனால் சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தி.மலை, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


