News November 29, 2024

இரவில் தோன்றும் ‘ஒளி தூண்கள்’

image

கனடாவின் அல்பெர்ட்டா நகரில் இரவு நேரங்களில் வானத்தில் ‘ஒளி தூண்கள்’ என அழைக்கப்படும் வெளிச்சம் தோன்றுகிறது. காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த வெளிச்ச தூண்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கனடாவில் இது போன்ற ‘ஒளி தூண்கள்’ பெரும்பாலும் குளிர் காலங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இது இயற்கையாக உருவாகும் ஒரு ஒளியியல் மாயை(optical illusion) என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Similar News

News April 25, 2025

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

image

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது. தீவிரவாத தாக்குதலால் எல்லையில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை இன்று பங்குச்சந்தைகளில் எதிரொலித்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. நிதி தொடர்பான நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

News April 25, 2025

பாக். வீரருக்கு அழைப்பு.. நீரஜ் சோப்ரா வருத்தம்

image

எனது தேசப்பற்றையே சோதிப்பது வலியைக் கொடுக்கிறது, எங்களை வேறு மாதிரி சித்தரிக்காதீர்கள் என நீரஜ் சோப்ரா என வேதனை தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாக். வீரர் அர்ஷத் நதீமை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கு நீரஜ் அழைத்திருந்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் வசைபாடினர். ஆனால், தாக்குதலுக்கு முன்னதாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் நீரஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.

News April 25, 2025

₹1000 கோடி முதலீடு… தொழில்துறையை ஈர்க்கும் TN

image

தமிழ்நாட்டில் மேலும் ₹1000 கோடி முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை CM ஸ்டாலின் திறம்பட கையாண்டதாகவும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!