News May 18, 2024
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டுமே சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செலுத்தியுள்ளதாகவும், 43,199 பேர் முடி காணிக்கை செய்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,120 குறைந்து ₹1,21,600-க்கும், கிராமுக்கு ₹265 குறைந்து ₹15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 4, 2026
ராஜ்யசபா MP யார்? EPS இன்று முடிவு

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் EPS இன்று ஆலோசனை செய்யவிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளர் என்று முடிவு எடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய வாக்குறுதிகள், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது, தேர்தல் பணிகள், நலத்திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
News March 4, 2026
கிளம்பினார் விஜய்

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் சற்றுமுன் புறப்பட்டார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கிடையில், தவெக கூட்டத்தில் பங்கேற்க காலையில் இருந்து தவெகவினர் குவியத் தொடங்கியுள்ளனர்.


