News April 27, 2025
5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் புனித யாத்திரை

கைலாஷ் – மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பின் தொடங்க உள்ளது. வரும் ஜூன் – ஆகஸ்ட் வரை 750 பேரை, 15 பிரிவுகளாக அழைத்து செல்ல வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2019-ல் இந்த யாத்திரை நடந்தது. கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன மோதலால் யாத்திரை நிறுத்தப்பட்டது. மானசரோவர் ஏரி சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் உள்ளது.
Similar News
News April 27, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
News April 27, 2025
CM ஸ்டாலினின் தாயார் ஹாஸ்பிடலில் அனுமதி!

CM ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் வயிற்று வலி, வாந்தி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியிருந்த நிலையில், இன்று(ஏப்.27) மீண்டும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News April 27, 2025
இன்று சாதனை படைப்பாரா ரோஹித்?

MI vs LSG போட்டியில் ரோஹித் ஷர்மா, ஒரு மாபெரும் சாதனையின் விளிம்பில் இருக்கிறார். இன்று அவர், 5 சிக்ஸர்களை அடித்தால், IPL-ல் 300 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை பெறுவார். இப்போட்டியில் டாஸ் வென்ற LSG கேப்டன் பண்ட், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ரோஹித் ரெக்கார்ட் படைச்சிடுவாரா..?